Saturday, August 8, 2009

குதிரை


உழவுத் தொழில் காலத்திற்குப் பின் மனிதனுக்குப் பயன்படும் விலங்காக குதிரை இருந்துள்ளது.

மாட்டைச் செல்வமாகக் கருதிய இந்தியாவில், குதிரைக்கு அந்த இடம் இல்லை. இன்றும் இந்தியாவில் ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குச் செல்ல மாட்டு வண்டியே பிரபலம்.

குதிரையை அரசர்கள் போருக்கும், அவசரத் தேவையாக, ஒற்று அறிதலுக்கும் பயன்படுத்தினர்.

தமிழ்நாட்டில் குதிரைப் பயன்பாடு மிகவும் குறைவு- வளர்ப்புப் பிராணியாக இல்லவே இல்லை எனலாம்.

1..அசுவாதி சாஸ்திரம் (1883),
2. மாட்டு வடாகம் (1913) (ஏன் குதிரை வடாகம் என்று இல்லை ? )
ஆகியவை தமிழில் குதிரை குறித்த நூல்கள்.

1. குதிரை பிறந்த நேரம்,
2. பற்களால் ஆயுள் அறியும் வகை,
3. எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய சுழிகள்,
4. நாடியறிந்து அதன் மூலம் வியாதி வகைகள் அறிவது

என்று இந்த நூல்களில் குதிரை பற்றிய தகவல்கள் உண்டு.
இன்று குதிரைகள் பந்தயத்திற்கும், காட்சிப் பொருளாகவும், பீச்சில் சவாரி செய்யவுமே பயன்பட்டு வாழ்கின்றன.

ஆனால், சதுரங்க ஆட்டத்தில் இந்த குதிரையின் பங்கு மகத்தானது.
ஆட்டத்தில் சிறந்து விளங்க விரும்பும் எவரும்,
இந்த குதிரையின் போக்கைக் கணித்து ஆட வேண்டியது மிகவும் அவசியம்.

இதற்குப் பயிற்சியாக ஒரு விளையாட்டு உண்டு.

இந்தப் பயிற்சி விளையாட்டிற்கு ஒரு குதிரை மட்டுமே பயன்படுத்தப்படும்.மேலும்

மேலும்

ஒரு குதிரையின் பயணம்

Friday, August 7, 2009

சதுரங்கம் என்னும் சர்வதேச மொழி

நீங்கள் ஒரு சதுரங்க ஆட்டக்காரராக இருந்தால், சதுரங்க ஆட்டம் உங்களைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டிருக்கும். உங்களுக்கு நல்ல தூக்கம் என்பது இந்த ஆட்டத்தால் வருவது கிடையாது.

மனதில் அன்பும், கருணையும் உள்ளவராக இருப்பவர்களுக்குச் சதுரங்க ஆட்டம் ஆட இயலாது.

பயங்கொள்ளிகளுக்கான ஆட்டமும் இது அல்ல.

சதுரங்க ஆட்டம் ஒரு புரிந்து உணர வேண்டிய ஆட்டம், அது நினைவாற்றலைப் பொறுத்ததன்று.

சதுரங்க ஆட்டம் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ள வேண்டியதன்று. அது சுதந்திரமாகச் சிந்தனை செய்வதற்கும், தீர்மானமான முடிவுகளை எடுப்பதற்கும் பயில வேண்டிய ஒரு ஆட்டமாகும்.

சதுரங்க ஆட்டத்தில் முக்கியமான ஒரு தத்துவம் பாதுகாப்பு அடுத்தது செயல்புரிவது. மற்றவை எதுவுமே முக்கியமானவை அல்ல.

ஒரு ஆட்டம் எப்போது பதட்டமான, ஆபத்தான நிலையை அடைந்துவிட்டது என்பதை உணர்வது சதுரங்க ஆட்டத்தில் பயிலவேண்டிய ஒரு மகத்தான கலையாகும்.

ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதைவிட தெரிந்த கலையை எவ்வளவு செயல்படுத்துகிறார் என்பது சதுரங்க ஆட்டத்தில் முக்கியமானது. இந்தக் கருத்தை அடிக்கடி நினைகூற வேண்டும்.

சரியாக சில மணிநேரங்கள் மட்டும், முறையான நுணுக்கங்களை ஒருவர் கற்பது, பத்து வருடங்கள் அனுபவப்பட்டு கற்கும் பாடத்திற்கு இணையான ஒன்றாகும்.

சதுரங்க ஆட்டம் என்பது ஆட்டக்காரருக்கும் அவருடைய எதிரிக்கும் இடையே நிகழும் ஒரு பேச்சு (அ) உரையாடல் எனலாம். ஆட்டக்காரரின் ஒரு மூவ் என்பது ஒரு பெரிய தவறாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய மிரட்டலாகவும் இருக்கலாம். அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்பது, "இவர் இந்த மூவ் செய்வதின் மூலம் என்ன செய்ய நினைக்கிறார்? அவரின் திட்டம் என்னவாக இருக்கும்? அடுத்து என்ன செய்ய முடியும் இவரால்?" என்பது போன்ற வினாக்களை எழுப்புவதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

வெற்றிக்கு வழி

===========

யோசிப்பதால் நான் இருக்கிறேன் என்றார் டெஸ்கார்டெஸ்.

தவறு செய்வதால் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு பிரபல செஸ் சாம்பியன்.

.

ஒரு தவறின் சில பகுதிகள் எப்போதுமே சரியாகத் தான் இருக்கும். இது எப்படியென்றால், ஆட்டத்தில் வெற்றி என்பது தவறால் விளைவது தான். தவறு எனப்படுவது ஆடுபவராலோ அல்லது எதிராளினாலோ மட்டுமே. அந்த வகையில் சதுரங்க ஆட்டத்தின் அழகு அதன் ஆட்டக் கள அமைப்பில் இல்லை. ஆட்டக்காரகளின் எண்ணப் போக்குகளில் உள்ளது.

ஆட்டக் களத்தின் முக்கிய அம்சம் ஒரு புத்திசாலி ஆட்டக்காரர் முட்டாளாகத் தெரியப்பட வேண்டும். ஆட்டத்தில் தவறு இல்லையென்றால் புத்திசாலித்தனம் என்பது தெரிய வாய்ப்பில்லை.

ஒரு சராசரி கிராண்ட் மாஸ்டர் ஒரு ஆட்டத்தில் மூன்று தவறுகள் செய்வாரென்றால், ஒரு சராசரி ஆட்டக்காரர் ஒரு மூவில் மூன்று தவறுகளைச் செய்பவராக இருப்பார் என்று ஒரு சொலவடை உண்டு.

சதுரங்க ஆட்டத்தில் ஒரு மோசமான மூவ் முந்தைய அனைத்து நல்ல மூவ்களையும் செயலிழக்க வைத்துவிடுகிறது.

அச்சப்பட்டும், பயமுறுத்தலுக்கும் உள்ளான ஆட்டக்காரர்கள் இறப்பதற்குச் சமமான தோல்வியை அடைவது ஒரு புறம் உண்மையாக இருந்தாலும் அந்த அனுபவத்தின் பயனால் அவர்கள் திறமை மேலும் கூர் தீட்டப்படுகிறது.

சதுரங்க ஆட்டத்தில் எவ்வளவோ மூவ்கள் இருந்தாலும், தோல்வியுறச் செய்து, செயலிழக்க வைப்பது ஒரே ஒரு மூவ் மட்டுமே. அந்த ஒரு மூவ்வை நோக்கிய பயணமே முந்தைய மற்ற எல்லா மூவ்களும் ஆகும்.

வருமிடர் ஏற்றுக்கொண்டு துணிந்து செயலில் இறங்குபவரே ஆட்டத்தில் வெற்றி கொள்ளவது இயலும்

சதுரங்க ஆட்டத்தில் ஒரு வெற்றியாளராக விளங்க வேண்டுமா? அதற்கு முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், பலம் பொருந்திய, திறமையான ஆட்டக்காரகளுடன் திரும்பத் திரும்ப விளையாடித் தோற்க வேண்டும்.

இரண்டாவதாக, அவ்விதம் தோற்ற ஆட்டங்களைத் தனிமையில் திரும்பவும் ஆடிப் பார்த்து, ஆட்டத்தில் தான் செய்த தவறுகளை மறுபடியும் உணர வேண்டும்.

இதில் ஒரு கசப்பான உண்மை உள்ளது. இவ்விதம் செய்து பார்ப்பது, நமக்கே நம்மையே பிடிக்காமல் போய்விடும்.

திரும்பத் திரும்ப ஆட்டத்தை ஆடியபடியே இருந்து, தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனத்தின் உச்சம்.

நம் அபார ஆட்டத் திறமையால் எதிராளி ஆட்ட நிலையைக் கண்டு ஆச்சரியப்படுதல் என்பது - நாம் பாதி ஆட்டத்தை வெற்றி கொண்டுவிட்டதற்கான ஒரு அடையாளம்.

சதுரங்க ஆட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் நமக்கு இருக்கும் அடுத்த மூவிற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே.

ஆட்டச் சூழ்நிலை நம்மை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ அதை நாம் கட்டாயமாகச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யத் தவறினால் மோசமான விளைவுகள் நிச்சம் நமக்குக் காத்துக் கொண்டிருக்கும்.

ஆட்ட நிலையில் ஒன்றும் யோசித்து செயல்படுத்த முடியவில்லையா ? அம்மாதிரி சமயங்களில் எதிராளியை அவரின் யோசனையைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்டிப்பாக அதில் பிழை அல்லது மகா மோசமான ஒரு கோணம் இருக்கும். அதைக் கண்டுபிடித்து செயல்பட்டாலே போதும். வெற்றி நிச்சயம்.

மேலும், ஆட்டத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு வெற்றி அடைகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு தடுத்தாடும் ஆட்டக் கலையை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சூழ்ச்சி முறையும் சூழ்ச்சித் திறனும்

==========================

ஆட்டநிலையில் ஒரு ஆதிக்கநிலை என்பது சூழ்ச்சித்திறமுடைய செயல்முறைகளைச் செயல்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். தாக்குவது என்பது ஆட்டநிலையில் ஒரு ஆதிக்கநிலை இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். தாக்குதல் நடத்துவது என்பது அதற்கான மனநிலையை முதலில் வரவழைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது. தாக்குதல் நடத்துபவர் மட்டுமே சதுரங்க ஆட்டத்தில் வெற்றி கொள்கிறார். இது ஒரு முக்கியமான விதி.

சூழ்ச்சி முறைக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல். சூழ்ச்சித் திறனுக்குத் தேவை நுண்ணறிவுடன் கூடிய கூர்ந்த கவனிப்பு.

துல்லியமாகத் திட்டமிட்டு வெற்றிக் கொள்ள முடியவில்லை யென்றால், அடுத்த வழி பயமுறுத்தி, குழப்பி தோற்கடித்துவிடுவது.

சதுரங்க ஆட்டத்தில் பயமுறுத்துவதென்பது, செய்து முடிப்பதை விட பலமான ஒரு செய்கையாகும். பயமுறுத்தல் என்பது இரண்டு சமயங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

ஒன்று-: ஆட்டத்தின் களத்தை தனக்குச் சாதகமான வழியில் முன்னேற்றுவதற்கு, இரண்டாவது ஆபத்தான தோல்வியைத் தழுவக் கூடிய நிலையிலிருந்து முன்னேற்றமான ஒரு நிலைக்கு உயர்த்துவதற்கு.

ஆட்டக்காய்களை வெட்டுக் கொடுத்து இலக்கை அடைய முயல்வது ஒரு அணுகுமுறை.

ஆட்டத் துவக்கநிலையை ஒரு புத்தகம் சொல்லிக் கொடுத்ததுபோல கட்டுக்கோப்புடன் ஆடவேண்டும். ஆட்ட நடுநிலையை ஒரு மாயக்காரனைப் போல நகர்த்திச் செல்ல வேண்டும். ஆட்ட இறுதிநிலையை ஒரு இயந்திரம் போல உணர்வுகளுக்கும், பச்சாதாபத்திற்கும் இடம் கொடுக்காது ஆடி முடிக்க வேண்டும்.

நேர நிர்வாகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனக்கு பத்து நிமிடமும், எதிராளிக்கு ஐந்து நிமிடம் மட்டுமே இருக்கும் ஆட்ட இறுதிநிலை வெற்றிக்கான வாய்ப்புகளை நின்று அவதானித்து உள் வாங்கும் திறமையை பயன்படுத்திக் கொள்ள உதவும்.

சதுரங்க ஆட்டத்தில் நல்ல மூவ் என்று தெரிவதை விரைவில் செய்யக் கூடாது. அதற்கான சூழ்நிலையை மெல்ல மெல்ல உருவாக்கி அந்த மூவ் செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தி பின்பே அதைச் செய்ய வேண்டும்.

ஆட்டநிலமை வெற்றிகொள்ள வேண்டியதாக இருந்தால் எதிராளியின் பலத்தை அழிக்க வேண்டும், ஆட்டநிலமை சரிசமம் செய்ய வேண்டியதாக இருந்தால், எதிராளியின் பலவீனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சதுரங்க ஆட்டக்காரரின் திறமை ஆட்டத்தின் நுணுக்கங்கள், சட்டதிட்டங்கள் பற்றிய அறிவைப் பொறுத்து அல்ல, அவைகளில் உள்ள விதிவிலக்குகளைக் கண்டறிந்து பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. அதாவது, சதுரங்க ஆட்டத்திறமை என்பது கஷ்ட காலங்களில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மீளும் வழியை ஆராய்வது மட்டுமல்ல, அவற்றில் உள்ள விதிவிலக்குகளையும் கண்டறிவதாகும்.

மிகவும் பலம் பொருந்திய - திறமையான ஒரு விளையாட்டு வீரரால் தான் அவர் எந்த அளவிற்கு விளையாட்டில் பலகீனமானவர் என்று அறிய முடியும். அதாவது ஒரு சிறந்த விளையாட்டு வீரரால் தான் அவருடைய மோசமான விளையாட்டை அடையாளம் கண்டுகொள்ள இயலும். எல்லா செஸ் மாஸ்டர்களும் ஒரு காலத்தில் துவக்கநிலை ஆட்டக்காரர்களே.

பொதுவாக ஒரு தப்பெண்ணெம் உண்டு. சதுரங்க ஆட்டத்தைத் திறமையாக போதிப்பவர் ஒரு சிறந்த ஆட்டக்காரராக இருப்பார். ஏனென்றால், ஒரு சிறந்த ஆட்டக்காரர் தான் சிறப்பாக போதிக்க முடியும். உண்மை என்னெவென்றால், திறமையாக போதனை செய்பவர், சதுரங்க ஆட்டத்தில் ஈடுபாடுடைய ஒரு கத்துக்குட்டி எனப்படும் அமெச்சூர் மட்டுமே.

மெய்ப்பித்துக் காண வேண்டிய புனைவியலான உண்மைகளை நிரூபிப்பது துவக்க நிலை ஆட்டக் காரர்களுக்கான வேலை.

தங்கள் ஆட்ட அனுபவங்களை அடுத்தவர்களுக்குச் சொல்லித் தருவது ஆட்டத்தில் அனுபவப் பட்டவர்களுக்கான வேலை.

சதுரங்க ஆட்ட அனுபவங்கள் நிஜ வாழ்க்கை அனுபவங்களுக்கு துணை புரிவது போல மொழிபெயர்க்கப் பட வேண்டியது அவசியம்.

ஆட்டம் ஆடும் எதிராளியை ஒரு எதிரியாக பாவிக்காமல், ஆட்டக் காய்களையே எதிரிகளாக பாவிக்கும் மனோநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

சதுரங்க விதிகள்:

=============

1.திரும்பத் திரும்பச் செய்வது மட்டுமே கற்றுக் கொள்வதின் ஆன்மநிலை.

2.முகச் சவரம் செய்யக் கற்றுக் கொள்வதென்றால் அடுத்தவரின் முகம் தான் முதலில் சரியாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு தான் கற்றுக் கொள்வதின் பலன் முழுமையாகப் போய் சேரும்.

3.சதுரங்க ஆட்டம் என்பது அறிவிற்கும், தர்க்கத்திற்கும் மட்டுமான ஒரு ஆட்டம் அல்ல

4.ஆட்டத்தில் ஒருவர் நன்றாக ஆடவேண்டும் என்பது தேவையில்லை. எதிராளியை விட நன்றாக ஆடினாலே போதுமானது.

5.ஐயப்படுவதும், அவநம்பிக்கை கொள்வதும் சதுரங்க ஆட்டக்காரரின் குணாதிசயமாக இருத்தல் வேண்டும்.

6.ஒரு நல்ல ஆட்டக்காரராவது என்பது என்றுமே ஒரு தாமதித்த நிலை அல்ல. அந்த நிலையை யார் விரும்பினாலும் அடைய முடியும்.

7.ஒரு ஆட்டக் காயைப் போல இருக்கக் கூடாது. ஒரு ஆட்டக்காரர் எல்லா ஆட்டக் காய்களையும் நிர்வகிப்பது போல இருக்க வேண்டும்..

8.முதுகில் குத்துப் படாமல் வாழ வேண்டுமென்றால், நம் பின்னால் யார் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற அறிவு நமக்கு நிச்சயம் வேண்டும்..

9.சதுரங்க ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருப்பது பாதி ஆட்டம் ஆடி முடித்தற்கு சமம். எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்திருப்பது மீதி ஆட்டம் ஆடி முடித்ததற்கு சமம்.



நன்றி
கே. ராமப்ரசாத்
http://sathurankam.wordpress.com

Wednesday, August 5, 2009

50 Strategies to gain the upper hand over your opponent

chess-strategies


Pawn structures

  1. Pawns are strong when they are in a chain; try to avoid splitting them into isolated groups.
  2. Isolated or hanging pawns tend to be a liability, try to avoid at least till the end game.
  3. Pawn chain shapes that look like /\ (an inverted V) from your side tend to be stronger than those that look like a \/.
  4. Doubled pawns are weak, try to avoid getting them.
  5. If you can maintain center pawns, you get more options to organize attacks.
  6. Your own pawn chains may block free movement of your pieces, mainly the bishops if stuck behind the chain. Avoid this disadvantage.
  7. Pawns cannot move backwards. Sometimes the opponent will deliberately lure you to advance your pawns to create weaknesses in your pawn structure. So think carefully before pushing them forward.
  8. Pawns in front of your castled king are there to guard the king. Try to avoid breaking up their line unless you have planned to launch a king-side attack with those.
  9. Check the possibility of getting a passed pawn and then defending it. A passed pawn becomes a thorn in the opponent’s flesh and even when it fails to become a queen, it can gain you significant material advantage through opponent’s efforts to neutralize it.
  10. Passed pawns in rook’s file are weaker than passed pawns in other files in the end game as it is easier for the opponent’s king to block the pawn in rook file.

Knights

  1. Knights play well in complex and locked positions. Assess their value and plan their movement accordingly.
  2. A knight posted on d6 and e6 squares can be a nuisance to your opponent. Try to get them there (with adequate support of course).
  3. Knights play well in the center part of the boards. Try to avoid keeping them at the sides (a- and h-files) unless your tactical plan calls for such positioning.
  4. Knight fork can be a very potent weapon. Creating such possibility can upset the plans of your opponent.
  5. Knights have a relatively poor play in the end game when the board is fairly open but with a number of opponent’s pawns ready to advance.
  6. In the end game, a knight may be helpless in preventing your opponent’s pawns if those are on two sides of the board.

Bishops

  1. Bishops, if not developed early, may get bogged by your own pawns blocking the diagonals. Be aware of this.
  2. Bishops play well if there are many open diagonals and a bishop pair in such situations can give you a great advantage.
  3. For above reasons, bishops are more helpful in the end game.
  4. If your bishop can control the long diagonal towards your opponent’s castled position, it can give you considerable leverage in your attack on the king.
  5. If you have only a single bishop in the end game, half the squares on the board are inaccessible to it. But with a few linked pawns of your own, a bishop can be a great help to support your pawn march and delay your opponent’s pawn advance (if you can position it in time).
  6. In the end game, a bishop can be better than a knight if the pawns are at two sides of the board.
  7. In general, bishop pair is more advantageous than the knight pair during the end game.

Rooks

  1. Rooks, like bishops, plays better if there are some open files.
  2. Try to take control of open files with your rooks. Two rooks in same open file provide a lot of opportunities for attack.
  3. Rook positioned in the 7th or 8th row becomes a headache for the opponent. Two rooks on that row can often provide mating attack or gain of material.
  4. Two rooks with lots of maneuvering space can often stand up to the opponent’s queen, particularly when minor powers and pawns are absent in the end game. You will find many games in chess archives where one player has given up the queen in exchange for two rooks.
  5. In endings with where you have King, Rook and Pawn against King and Rook, your rook should be behind the pawn and your king should be next to the pawn to get a win.

Queen

  1. Even though it is the strongest piece, it needs a rook or some minor pieces for its most effective use.
  2. Avoid taking the queen too far out during the openings as it is likely to get ‘harassed’ by opponent’s minor pieces to cause you a loss of tempo.

King

  1. Always a liability, is it? It becomes more so, if it is at its original position. Aim to castle at the earliest opportunity.
  2. Both kings castled on the same side normally do not get an immediate early attack. You have to maneuver through the Queen’s side. But castled on the opposite sides allow both players to launch direct attack through pawn advances.
  3. Kings come into their own in the end game with major pieces removed from the board. Try to keep king near your pawn group for their advance. Be aware of the ‘Square” and ‘opposition’.
  4. In the endings with King and Pawn vs. King, make the king lead the pawn, not the other way.
  5. Make yourself familiar with the standard strategies for handling different types of endings with pawns, minor pieces, rooks etc. Learn to identify situations that may give win or only a draw.

Positional

  1. Initial pawn movements facilitate the development of your minor pieces. Do not get distracted from this objective.
  2. In the opening phase, avoid moving the same piece twice (unless forced to do so and learn to avoid those kinds of positions). It loses you tempo.
  3. You gain tempo when you can achieve two objects in one move. For example, a pawn move may attack some piece while opening a line for your own pieces. Look for such opportunities.
  4. Try to seize control of the center (d4, d5, e4, e5 squares) as this will give you more play and better attacks. Of course, some opening strategy, particularly for black), may deliberately surrender some control in the center to gain more play in the flanks to neutralize opponents advantage.
  5. Don’t be greedy! Sometimes you may find an easy pawn to pick up but it may be a trap (‘poisoned pawn’). Accepting it will often allow the opponent to launch a powerful attack and often the best way to neutralize is to return that material instead of trying to hold on to it.
  6. Do not launch a premature attack. Develop your pieces such that they coordinate well with one another and then plan your attack. Unless you do this, you may find your attack to lose steam and that may put you at a disadvantage.
  7. A locked center (your and opponent’s pawns facing each other without being able to capture any) restricts movement of pieces in the center and thus facilitates flank attack without fear of counter-play at the center. Keep this possibility in mind.
  8. Check which of the opponent’s pieces is controlling the play. Try to capture it at the earliest.
  9. Exchanging your inactive piece with a similar but active piece of the opponent gives you an advantage. Try to avoid such exchange if the reverse is true.
  10. When in trouble, remember that attack is often the best form of defense. Look for such possibility.
  11. Since coordination of pieces gives advantage, try to cut off communication between opponent’s pieces e.g. by advancing a supported pawn in the opponent’s line of communication.
  12. Be aware of pins and how to create one. Properly handled, they can yield significant advantage.
  13. When cornered in the end game, look for opportunities to get into a position allowing stalemate and draw. Sometimes, a piece sacrifice may offer you this opportunity in an otherwise desperate situation. When you have an upper hand, guard against the opponent taking this route to draw the game.
  14. Whatever openings you normally adopt, learn the ideas behind the moves and the targets to be achieved. Without this focus, you will only create weaknesses for yourself.
  15. In general, King’s pawn openings lead to more open games and direct attacks on the king. Queen’s pawn openings create somewhat closed positions that need more maneuvering and positional play to launch indirect attacks.

50 Strategies to gain the upper hand over your opponent

Searching for Bobby Fischer

என்னைக்கவர்ந்த மற்றொரு அற்புதமான திரைப்படம், பாபி பிஷ்ஷருக்கான தேடல். (Searching for Bobby Fischer) பெரும்பாலானவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும், சில மாதங்களுக்கு முன்னர் கூட அமேரிக்காவின் வலியுறுத்தலின் பெயரால் ஜப்பானில் கைது செய்யப்பட்டு பின்னர் தற்சமயம் ஐஸ்லாந்தின் வாழும் பாபி பிஷ்ஷர், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சதுரங்க வீரர்.(Former world chess champion & One and only American to win the FIDE World Chess Championship.) ஆனால் படம் இவரது பெயரை கொண்டிருந்தாலும் கதை இவரைப்பற்றியது இல்லை. பிஷ்ஷரைப்போலவே சிறுவயதிலேயே சதுரங்கத்தின் அத்துனை திறமைகளும் கைவரப்பெற்ற ஒரு சிறுவனைப்பற்றிய(Josh Waitzkin - Max Pomeranc) திரைப்படம் தான் இது.

மேலும்

Tuesday, August 4, 2009

செஸ்' சக்கரவர்த்தி -BOBBY FISHER




உலகில் உள்ள உள்ளரங்க விளையாட்டுகளில் மூளைக்கு அதிக வேலைகொடுக்கும் விளையாட்டு சதுரங்கம். இது ஆங்கிலத்தில் செஸ் (CHESS) என அழைக்கப்படுகிறது. 32 காய்களுடன் 64 சதுரங்களைக் கொண்ட பலகையில் இருவரால் ஆடப்படும் விளையாட்டு.

இவ்வாட்டம் 6 ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இது பாரசீகம் ஊடாக ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளது. பாரசீகக் கவிஞன் உமர்கயாம் தனது `றுபையாத்' எனப்படும் கவிதைத் தொகுப்பில் உலக வாழ்க்கையை சதுரங்க காய்களிற்கு ஒப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.


மொகஞ்சதாரோ , ஹரப்பா நாகரிக காலத்தில் சதுரங்க ஆட்டம் இருந்ததற்கும் ஆதாரங்கள் உள.

இவ்வாட்டத்திற்கான பொதுவிதிகள் 16 ஆம் நூற்றாண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்விளையாட்டு மற்ற ஐரோப்பிய நாடுகளை விட ரஷ்யாவிலேயே நிலை கொண்டது. அங்கு குழந்தைகளுக்கு முறையாக சதுரங்க விளையாட்டுக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பாடசாலைகளிலும் ஒரு பாடமாக புகட்டப்படுகிறது. இன்றும் ரஷ்யா சதுரங்க விளையாட்டிலே முன்னணியிலேயே திகழ்கின்றது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு தொடர்ந்தும் ரஷ்ய நாட்டு சதுரங்க வீரர்களே உலகச் சம்பியன்களாக இருந்து வந்திருக்கின்றார்கள். சதுரங்கமானது திறமையை வளர்க்கக்கூடியதெனவும் புத்திக்கூர்மையை அதிகரிக்கக் கூடியது என்றும் மனக்குவிப்பை உண்டு பண்ணும் சக்தியுடையதெனவும் எண்ணப்பட்டது. சவால்களை சரியாக அறிந்து எதிர்நோக்க சிந்தனையைத் தரக்கூடியது என்றும் நம்பப்பட்டது. போர்க்கள வியூகங்களை வகுக்கும் திறமையை வளர்க்கக்கூடியதெனக் கருதப்பட்டதும் உண்டு.

இலங்கையிலே தமிழ் பேசும் மக்களிடையே இவ்விளையாட்டு பிரபல்யம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி யுகமும் கணினி வளர்ச்சியும் காலச்சூழ்நிலையும் சதுரங்க வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்விளையாட்டில் பலர் சிறந்தவர்களாய் இருந்தார்கள் என்பது சிலருக்குத் தெரியலாம்.

தமிழ்நாடானது ஆனந்தனை உலகச் சம்பியனாகத் தந்து புகழ் படைத்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஐக்கிய அமெரிக்காவிலும் சதுரங்க விளையாட்டு மந்த நிலையிலேயே இருந்து வந்தது. இது அமெரிக்காவின் பெருமைக்கு ஒரு கறையாகத் தோன்றியதென்பதை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால், அந்தக் குறை 1972 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து (ICELAND) தலைநகரான றெஜாவிக்தில் அமெரிக்கரான பொபி பிஷர் ரஷ்ய நாட்டு உலக சதுரங்க வீரன் ஸ்பாஸ்கி (SPASSKY) யை தோற்கடித்ததனால் இல்லாமல் போனது.

1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்க சம்பியன் போட்டி கிறாண்ட் மாஸ்ரர் (GRAND MASTER) செவட்டோசார் கிளிகோரிக் எனப்பட்ட யூகோசிலாவிய நாட்டைச் சேர்ந்தவரால் "நூற்றாண்டின் சதுரங்கப் போட்டி" யென வர்ணிக்கப்பட்டது.

உலகம் முழுவதுமே சதுரங்க விளையாட்டானது முதன்முதலாக பிரபலமாகியது ஸ்பாஸ்கி, பிஷர் ஆகியோரிடையே நடந்த உலக சதுரங்கப் போட்டியின் போதுதான் என்பது பிரதானமாகக் குறிப்பிடத்தக்கது. அதற்கு காரண கர்த்தா பிஷர் தான். அன்றைய நாட்களில் சதுரங்க தொடர்களின் முடிவுகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் படிக்க மக்கள் காத்திருப்பது சாதாரண நிகழ்வாக இருந்தது. மாலை நேர பத்திரிகைப் பதிப்புகளிலும் சதுரங்கத் தொடர் முடிவுகள் வெளிவந்த வண்ணமே இருந்தன.

சதுரங்க விளையாட்டை அறியாதவர்களும் இவ்விளையாட்டைத் தெரிந்துகொள்ள இது வழிவகுத்ததென்றால் அது மிகையாகிவிடாது. அவ்விதமான சதுரங்கப் போட்டி 1972 இற்கு முன்பும் நிகழ்ந்ததுமில்லை. பின்பும் நிகழப்போவதுமில்லை.

ஸ்ரிபன் மொஸ் (STEPHEN MOSS) புரொண்ட் லையின் (FRONT LINE) இதழில்` கடைசிச் சக்கரவர்த்தி' என்று தலைப்பிட்டு பிஷர் பற்றிய கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார். THE LAST EMPEROR என்று அவர் பொபி பிஷரை குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாகவிருக்கிறது.

சதுரங்க விளையாட்டின் வரலாற்றில் அலகையின் கப்பபிளங்கா, லஸ்கர், கெரஸ், நிம்சோவிச், பொட்வினிக், மார்ஷல், கார்போவ் என்று பல ஜாம்பவான்கள் காணப்பட்டாலும் பொபி பிஷரிற்கு ஒரு தனியிடம் என்றும் உண்டு. பொபி பிஷர் 1943 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு ஜேர்மனியர். தாய் ஒரு யூதப்பெண். பிஷரது மூத்த சகோதரி தான் பிஷர். சிறுவனாயிருக்கும் பொழுது அவருக்கு சதுரங்க ஆட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பிஷர் ஆங்கிலத்தில் சொல்வது போல் வாயில் வெள்ளிக் கரண்டிகளுடன் பிறந்தவரல்லர். பிஷருடைய குடும்பம் புருக்லினில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். இவர் தனது 6 ஆவது வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். அவரது அபாரத்திறமை 13 வயதில் அவரை அமெரிக்க யூனியர் சதுரங்க போட்டியில் வெற்றியை பெற்றுக்கொள்ளச் செய்தது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடுமையான உழைப்பும் 14 ஆவது வயதில் ஐக்கிய அமெரிக்க சம்பியன் பட்டத்தை வெல்லச் செய்தது. அவரது 15 ஆவது வயதில் பெரிய ஆசான் (GRAND MASTER) என்ற பட்டத்தையும் சம்பாதித்துக் கொண்டார். மிகவும் குறைந்த வயதில் இப்பட்டத்தை பெற்றவர் என்ற பெருமையும் இவரிற்கே உரியது.

பிஷர் சதுரங்க ஆட்டத்தில் மிக வேகமாக முன்னேற்றமடைந்தார். 1970 இல் FIDE எனப்பட்ட சதுரங்க சர்வதேச சபையில் அதிகாரபூர்வ வெற்றி எண்ணிக்கையில் 20 பெரிய ஆசான்களுக்கெதிரான (GRAND MASTERS) சதுரங்க ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்ட முதல் பெரிய சதுரங்க ஆசானாக கருதப்பட்டார். இன்று, பெரிய சதுரங்க ஆசானங்களிடையே நடக்கின்ற போட்டிகள் சரிசமமாகவே (Draw) முடிவடைகின்றன. அத்தகைய ஆட்டங்களை இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைப்பதில்லை என்று பலர் விசனமடைகின்றார்கள். இங்கு நாம் பிஷரின் தன் நம்பிக்கையையும் சதுரங்க விளையாட்டில் அவரது மேலாதிக்கத்தினையும் அவதானிக்கலாம்.

பிஷர், கணினியுகத்திற்கு முற்பட்டவர். சதுரங்க விளையாட்டில் ஆரம்ப நகர்த்தல்களை (OPENINGS) ஆராய புதிர்களை கண்டுபிடிக்க இன்றைய நாட்களில் கணினி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஆய்வுகளை பிஷர் கணினியின் உதவியின்றி தனியாகவே ஆய்ந்து அறிந்து கொண்டிருந்தார். இவர் காய் நகர்த்தும் முறையைப் பார்த்த பெரிய ஆசான்களே (GRAND MASTERS) மூக்கிலே விரலை வைத்தார்களாம்.

1972 இல் நடந்த நூற்றாண்டின் சதுரங்க ஆட்டம் றெஜாவிக் நகரில் நடைபெற்றது. பிஷர் உலகச் சம்பியன் போட்டியில் விளையாட பல முன் நிபந்தனைகளை விதித்தார். போட்டி தாமதமானது. அப்பொழுது அமெரிக்க ராஜாங்க செயலாளராக இருந்த கீசிஞ்சர் நேரடியாக பிஷருடன் பேசி உடன்பட வைத்தமை வரலாற்று முக்கியம் வாய்ந்ததாகும்.

உலக சதுரங்க வரலாறுகாணாத சிறந்த திறமை மிகுந்தவராக பிஷர் இருந்தபோதும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்தன. ஓர் விசித்திரமான மனிதராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்திய அவரது சாதனை அவரது ஆரம்பமும் முடிவும் ஆகிவிட்டது.

அவர் 1975 இல் உலக சம்பியன் பட்டத்தை காத்துக்கொள்ள, போட்டியில் கலந்து கொள்ள, நடைமுறைச் சாத்தியமற்ற சில முன் நிபந்தனைகளை வைத்தார். F.I.D.E. எனப்பட்ட சர்வதேச சதுரங்க மன்றம் எவ்வாறு முயன்றும் முடியாத பட்சத்தில் பிஷர் போட்டியில் கலந்து கொள்ளாமலே உலக சதுரங்க பட்டத்தை இழக்க நேரிட்டது. இதனால் மீண்டும் ரஷ்யாவைச் சேர்ந்த அனற்றோலி காப்போவ் உலக சதுரங்க சம்பியனானார்.

1975 இற்குப் பின் பிஷர் தனிமைப்பட்டு சமூகத்தின் நின்றும் ஒதுங்கி வாழ்ந்தார். இருபது வருடங்களின் பின் 1992 இல் ஸ்பாஸ்கியுடன் தனிப்பட்ட போட்டியில் விளையாடினார். ஐக்கிய அமெரிக்காவுக்கு வேண்டாத மனிதனானார். புடாபெஸ்ட் நகரில் தாடியுடன் இடையிடையே காட்சியளித்தார். அமெரிக்காவிற்கே செல்ல முடியாத ஊதாரிப் பிள்ளையானார். இச்சந்தர்ப்பத்தில் ஐஸ்லாந்து பிஷரிற்கு ஆதரவளிக்க முன்வந்தது. பொபி பிஷரின் உலக சாதனைக்கே களமாக அமைந்த ஐஸ்லாந்து 2005 இல் பிஷரின் இறுதிக் கால வாழ்க்கைக்கு அடைக்கலமளித்த தேசமாக அவரிற்கு வசிப்புரிமை அளித்து வரவேற்றது.

சதுரங்க சிம்மாசனத்தின் கடைசிச் சக்கரவர்த்தி கைகளால் சதுரங்க காய்களையே தொடாது வாழ்ந்து முடித்தார். "செக்ஸ் ஐ விட செஸ் சிறந்தது" (CHESS IS BETTER THAN SEX) என்று கூறிய பிஷர், 64 சதுரங்களையே தமது வீடாக எண்ணியவர் இத்தகையதோர் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பிஷரைப்பற்றி ரஷ்ய முன்னை நாள் உலக சதுரங்க சம்பியன் அவரைப் பாராட்டி `ரைம்ஸ்' (Times) என்ற ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை பற்றி குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகிறேன்.

பிஷரில் குறைகள் இருந்த போதிலும் அவரது அபாரத்திறமைக்கு அவர் நினைவு கூரப்படவேண்டியவர் என்கிறார். தான் படித்த சதுரங்கம் பற்றிய நூல்களுள் "என் நினைவில் நிற்கும் 60 ஆட்டங்கள்" என்ற பிஷரது நூலும் ஒன்று எனக் குறிப்பிடுகிறார். பிஷருடைய வெற்றியின் விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது எனவும் போட்டியில் அவரை எதிர்க்க முடியாத சக்தியுடன் விளையாடினார். அவரைப் போல் ஒவ்வொரு ஆட்டத்திலும் இறுதிவரை போராடியவர்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.

சதுரங்கம் என்ற விளையாட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்காக இரவும் பகலும் பாடுபட்டவர் என்றும் சதுரங்க ஆட்டத்தில் புதிய நகர்த்தல் முறைகளை கொண்டுவந்தவர் எனவும் பிஷர் ஒரு சதுரங்க புரட்சி எனவும் அப்புரட்சி இன்று தொடர்கிறது என்றும் எழுதியுள்ளார். அவரது எதிராளிகளே அவரைப் பாராட்டினார்கள் என்று காட்டியிருப்பது இங்கு எடுத்துக்காட்ட வேண்டியதொன்றாக இருக்கிறது.

பிஷருடைய வாழ்க்கையை வைத்து சதுரங்க ஆட்டத்தையே குறைகூறுவது பொருந்தாது. பிரித்தானிய சதுரங்க சம்பியன் பில் காட்ஸ்ரன் (BILL HARTSTION) பின்வருமாறு குறிப்பிட்டார்.

""Chess does not drive people mad' it keeps mad people sane' சதுரங்க ஆட்டமானது மனிதரை பைத்தியமாக்கிவிடாது. ஆனால் பைத்தியக்காரர்களையே புத்திசுவாதீனம் உள்ளவர்களாக வைத்துக் கொள்ளும்.

64 சதுரங்களை ஆட்சிபுரிந்த பிஷர் தனது 64 ஆவது வயதின் இறுதியில் 18.01.2008 இல் ஐஸ்லாந்தில் காலமானார். பொபி பிஷர் மறைந்தாலும் சதுரங்க வரலாறு அவரை என்றும் மறந்துவிடாது. சதுரங்க ஆட்டத்தை உலகறியச் செய்த பெருமையும் பிஷர்ரையே சார்ந்ததே.

சதுரங்க ஆட்டத்தின் கடைசி சக்கரவர்த்தி பிஷர் மறைந்த ஆண்டான 2008 இல் பல புதிய தலைமுறையினர் சதுரங்க ஆட்டக்காரர்களாக உருவெடுப்பார்கள் என நம்புகிறோம்.


நன்றி
ஆர்.எம்.ரஞ்சிதன்
Email this page

Sunday, August 2, 2009

தொடக்க ஆட்டம்( OPENING)


CARO KANN

1.e4 c6 2.d4 d5 3.Nc3 dxe4 4.Nxe4 Bf5 5.Ng3 Bg6 6.h4 h6 7.Nf3 Nd7










KING INDIAN

1.d4 Nf6 2.c4 g6 3.Nc3 Bg7 4.e4 d6 5.f4
















SICILIAN


1.e4 c5 2.Nf3 d6 3.d4 cxd4 4.Nxd4 Nf6 5.Nc3 g6 6.Be3 Bg7 7.f3 O-O 8.Qd2 Nc6 9.Bc4




RUY LOPEZ

1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 Nd4


மேலும் இங்கு பார்க்கவும்

Saturday, August 1, 2009

சதுரங்கம்



ஒவ்வோரு ஆண்டும் ஜுலை மாதம் 20ம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அல்லது நினைவுகூறப்படுகின்றன. குறித்த விஷயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விஷயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது

FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24,1924 ல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இதில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகிறது.
புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8 X 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும் அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத் தளங்கள் இன்று இணையப் பின்னலில் காணப்படுகின்றன.

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951ல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 (ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161ல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005ம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். ஏப்ரல் 13 1963ல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985-2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். எலோ தரவுகோள் 2851 (ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985ல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993ல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் ("Classical" World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார்.

பிப்ரவரி 10, 1996ல் ஐபிஎம்மின் "டீப் புளூ" கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997ல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஜூன் 25, 1975ல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000-2006 (மரபுவழி) பட்டம் 2006-2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார். 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார்.

2004ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னையைச் சேர்ந்தவர் டிசம்பர் 11, 1969ல் பிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994லிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29, 2007ல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார்.

இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இவர் இதுவரை பெற்றுள்ள சதுரங்க பதக்கங்கள் வருமாறு:

2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர் 2000 சதுரங்க வெற்றிவீரர் 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர் 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில் 1984 தேசிய மாஸ்டர்- 15 வயதில் 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004) பத்மபூஷண் (2000) பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992) தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987) தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985).