Saturday, August 1, 2009

சதுரங்கம்



ஒவ்வோரு ஆண்டும் ஜுலை மாதம் 20ம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அல்லது நினைவுகூறப்படுகின்றன. குறித்த விஷயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விஷயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது

FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24,1924 ல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இதில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகிறது.
புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8 X 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும் அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத் தளங்கள் இன்று இணையப் பின்னலில் காணப்படுகின்றன.

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951ல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 (ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161ல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005ம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். ஏப்ரல் 13 1963ல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985-2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். எலோ தரவுகோள் 2851 (ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985ல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993ல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் ("Classical" World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார்.

பிப்ரவரி 10, 1996ல் ஐபிஎம்மின் "டீப் புளூ" கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997ல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஜூன் 25, 1975ல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000-2006 (மரபுவழி) பட்டம் 2006-2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார். 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார்.

2004ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னையைச் சேர்ந்தவர் டிசம்பர் 11, 1969ல் பிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994லிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29, 2007ல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார்.

இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இவர் இதுவரை பெற்றுள்ள சதுரங்க பதக்கங்கள் வருமாறு:

2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர் 2000 சதுரங்க வெற்றிவீரர் 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர் 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில் 1984 தேசிய மாஸ்டர்- 15 வயதில் 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004) பத்மபூஷண் (2000) பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992) தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987) தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985).

2 comments:

  1. பல உபயோகமான தகவல்கள்! சதுரங்கம் பற்றிய பல விபரங்களை அறிந்து கொண்டேன்!

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு..தொடருங்கள் !!

    ReplyDelete